21.7.11

வருக! அனைவரும் வருக!

சுழி வழங்கும்

தமிழின் சிறந்த வலைத்தளம் சவுக்கு (www.savukku.net)

                  விருது விழா


நாள்: 31.07.2011 இடம்: பர்வானா அரங்கம், பொள்ளாச்சி

பொழுது: மாலை 5 மணி

பங்கேற்பு: கவிஞர்கள்

கலைஞர்கள்

      எழுத்தாளர்கள்

மற்றும் சவுக்கின் நாயகர் சங்கர்
------------- ---------------

தோழமைக்கு
வணக்கம்

பொள்ளாச்சி நகரில்

அணையாப் பெருந்தீயை

ஆகப்பெரும் தமிழ்மரபில்

கொளுத்திப்போட விழைபவர் நாங்கள்.


தமிழ்த்தேசிய ஓர்மை

சாதியொழிப்புத்தீவிரம்

பெண்ணிய கவனம்

அடக்குமுறை கிளர்த்தும் எல்லாத் திசையிலும்

நுரைத்துப்பொங்கும் எதிர்ப்புணர்ச்சி என

எல்லாம் கலந்து மிளிர்வது

எங்கள் 'சுழி'யின் முகம்

கலைஇலக்கிய வெளியில்

தாங்கமுடியாத வெப்பக் கனவு சுமந்த முகம் .


அது

இருபத்தைந்தாம் அமர்வை எட்டிப்பிடிக்கும் இந்த வேளையில்

தமிழின் திமிர்வாய்ந்த வலைத்தளமான

சவுக்கு'

Linkதளத்திற்கு

'' தமிழின் சிறந்த வலைத்தளம்' என்ற விருதை

தாளாத மகிழ்வோடு வழங்கிட விழைகிறோம்.


'சுழி' என்றால் யார்?

நாங்கள், நீங்கள் இன்னும்

சமூக இழிவுகளைக் கொளுத்திப் போகி கொண்டாட

எத்தனிக்கும் எந்த உயிரும்

'சுழி'தான்.


அடக்குமுறைக் கரையான்களை அழித்தே பழக்கப்பட்ட

எந்த நெருப்பின் இழையும்

சுழி'தான்.


வாருங்கள்!


எதற்கும் 'மசியாத' சவுக்கைக் கொண்டாடுவோம்.

அநீதிக்கெதிரான எதிர்ப்புணர்ச்சியை ஒரு

அணிகலனாய்ச் சுமந்திருக்கும்

சவுக்கு வலைத்தளத்தை

நம் தோளிலேற்றி இது தமிழரின் குணம் என்று பறைசாற்றுவோம்!


'நாமார்க்கும் குடியல்லோம்' எனும் தமிழ்மரபின் மிச்சத்தை

ஏந்தி நிற்கும்

'சவுக்கு' வலைத்தளம்

சமகாலத் தமிழ் இணைய உலகின் தலைசிறந்த வலைத்தளம்

எனப் பரிசில் வழங்கிப் பகிர

அறைகூவி அழைக்கிறோம்!


வருக! அனைவரும் வருக!


19.1.10

சுழி அமர்வு 18






18 வது அமர்வு நளினி ஜமிலாவுடன்....