19.12.08

21.11.08


4.8.08

முகம் பார்த்தல் - சோழநிலா

தெளிந்த நீர்த்தடத்தில்

பதிந்து

நனையாமலேயே

முகத்திற்கு நீள்கிற

சுவடுகளை

புரிதலுடன் வாங்கிக்கொள்வதற்கான

கைகளை இழந்துவிட்டிருந்தன

அவரவர்களிலிருந்தும்

முகம்பார்த்தல்

31.7.08

உனக்குத் தேவையான நானும், நானும்.- ஸ்நேகிதன்

துயரங்களின் சவம் மேயும்
கானகமொன்றில்
ஒற்றைக் குடிசையில்
விடிந்தே விடாத இரவுகளோடு
சாயுங்காலத்தின் பேரழகு போர்த்தி
மெல்லுறங்குவாய் சகி
காயம் செய்து விடாத கலவியும்
சாயம் போகாத காதலும்
வெளியெங்கும் நிறைய
பதுங்கு குழிப் போராளிப் பிணங்கள் குறித்தோ
ஒபாமாவின் இனிக்காலப் போர்க் கொள்கைகளிளோ
புவிச் சூட்டிலுருகும் திடநீர்ப் பாலைகளையோ
அபுகாரிபின் நிர்வாணங்களையோ
மறந்த மனநோய்க்காளான நான்
கூரையின் கீற்றுகளைப் பிரித்தெறிந்து
வானம் நுழைத்து
பரஸ்பரம் பேசிக் கொள்வோம்.
நீ பேரழகியாகிப் போனதொரு கதை குறித்து...

தான்தோன்றிப் பாடலும் யுகங்களின் துயரமும்--ஸ்நேகிதன்

என் இசைப்பாடல்களை
நீர்த்துப் போன இக்காற்றில்
உலவச் செய்கிறேன்.
நேற்றின் பாடல்களைப் பிதற்றித் திரியும்
இல்லாத சூர்ப்பனகையொருத்தி
மூக்கிழந்ந துயரம் சொல்லி மடி சாய்கிறாள்.
அவளது துயரம்
யுகாதி யுகங்களுக்கானது
இல்லாமையின் இருப்பு
சொட்டி வழிந்து கொண்டிருக்கும்
அவளது தலையுதிரத்தில் வாசமடிக்கிறது.
இங்கு நிலா வெளிச்சத்தில்
இரதங்கள் ஓடியது.
தொண்டைக் குழிகள் கிழிபட்ட இரத்தம்
ஒலிப்பெருக்கி வழி தெருவோடியது.
அவளின் இல்லாத மூக்கின்
புராதன நிமித்தம்
மண் கடலில் பிரேதங்கள் மிதந்தன.
ஆமாம், இன்னும் இன்னும்
மண் கடலில் பிரேதங்கள் மிதக்கின்றன.
இரண்டு லார்ஜுகள்
ரொமொனாவ் வோட்காவில்
எலுமிச்சஞ்சாற்றைப் பிழிந்தடித்த போதையில்
கிடந்துறங்கிப் போன அவள்
பிறகொரு நாளிலெழுந்து
மாயவனம் சென்று சேர்ந்தாள்.
இன்னமும் மண் கடலில் பிரேதங்கள் மிதக்கின்றன.
மரணத்தின் பேரழுகையை
சொல்லியலைகின்றன செய்வதற்கியலா
என் பாடல்கள்.

28.7.08

நதியாட்டம்--புன்னகை சேது

அதிரடியாக ஆடி ஆடி
அடிவாங்கியதுதான் மீதமானது.
சுயத்தின் வர்ணம் வடியாமலிருக்க...
தலைவனெனப்படுபவன் விட்டுக்கொடுப்பதால்
அடிவாங்க வேண்டியிருக்கிறது ஒவ்வொருமுறையும்.
இன்றைய ஆட்டத்தை
மிக நிதானமாக ஆடத்தொடங்கியிருக்கிறோம்.
எங்கள் களிப்புக்களைத் தேக்கியிருக்கும்
அணைகளைத் தகர்க்கும் சிந்தனையோடும்
உரிமை உரிமை எனக்கதறும்
மக்களின் முன்னிலையிலும் ஆடப்படுவதால்
நிச்சயமாக்கப்பட்டிருக்கிறது வெற்றி.
நடுவர் யாருமில்லை என்பது
அதற்குக் கூடுதல் பலம்.